அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

கடந்த 2009ம் ஆண்டில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா,சந்தானம் நடித்து வெளியான படம் 'சிவா மனசுல சக்தி' . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
சமீபத்தில் கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜீவா, எம், ராஜேஷ், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இந்த படத்தை மலேசியாவை சேர்ந்த மாலிக் ஸ்டீரிம்ஸ் நிறுவனம் என்கிற பிரபல விநியோகஸ்தர் தயாரிக்கின்றார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்த படம் சிவா மனசுல சக்தி 2ம் பாகம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. ஆனாலும், அந்த படத்தை போல இந்த படத்தையும் ஜாலியான படமாக தர முயற்சி செய்கின்றனர். இந்த படத்திற்கு ' ஜாலியா இருந்த ஒருத்தன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் சந்தானத்தை ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.




