'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
உலக அளவில் பிரபலமான தனியார் டிவி நிறுவனம் ஸ்டார். 1990ம் ஆண்டு ஸ்டார் டிவி என ஆரம்பிக்கப்பட்டது. ஆசிய ரசிகர்களுக்காக ஸ்டார் பிளஸ் உள்ளிட்ட ஐந்து டிவி சானல்கள் துவங்கப்பட்டன. அதன்பின் 1992ம் ஆண்டு ரூபர்ட் முர்டாக் நியூஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதன் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது. அதன்பின் ஸ்டார் மூவீஸ், சானல் வி, ஸ்டார் நியூஸ் உள்ளிட்ட சானல்கள் இந்திய ரசிகர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.
2001ம் ஆண்டில் அந்நிறுவனம் தமிழ் டிவி சானலான விஜய் டிவியை வாங்கியது. தொடர்ந்து பல இந்திய மொழிகளில் டிவி சானல்கள் வாங்கப்பட்டது, சில சானல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டது. 2015ம் ஆண்டில் ஓடிடி தளமான 'ஹாட்ஸ்டார்' ஆரம்பிக்கப்பட்டது.
2019ம் ஆண்டில் டிஸ்னி நிறுவனம் அந்நிறுவனத்தைக் கைப்பற்றியது. 2020ம் ஆண்டில் ஹாட்ஸ்டார், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் எனப் பெயர் மாறியது. கடந்த வருடம் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிஸ்னி மற்றும் ரிலயன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் ஒப்பந்தம் செய்துகொண்டன.
இதுவரையில் 'டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்' என்று செயல்பட்டு வந்த ஓடிடி தளம் இனி, 'ஜியோ ஹாட்ஸ்டார்' என செயல்படும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். அதற்கான லோகோவும் புதிதாக மாற்றப்பட்டுள்ளது.