மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் நடிகர் மோகன் பாபு. அவருக்கும் அவரது இளைய மகனான நடிகர் மஞ்சு மனோஜுக்கும் இடையே குடும்பத் தகராறு நிலவி வருகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் மோகன் பாபு வீட்டில் நடைபெற்ற தகராறை அடுத்து பத்திரிகையாளர்கள் அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர்.
அப்போது கேள்வி கேட்ட டிவி நிருபரைத் தாக்கினார் மோகன் பாபு. இதில் காயமடைந்த டிவி நிருபர் அளித்த புகாரை அடுத்து மோகன் பாபு மீது வழக்கு தொடுக்கப்பட்டது. காயமடைந்த நிருபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த வழக்கில் கைதாகி விடலாம் என்ற அச்சத்தில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடுத்தார். ஆனால், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார் மோகன் பாபு. அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.