நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பரியேறும் பெருமாள் என்ற படத்தில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதன்பிறகு தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற படத்தை இயக்கினார். தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். 1970 களில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையில் இயக்கப் போகிறாராம் மாரி. அந்த காலகட்டத்து மனிதர்களின் கெட்டப்பிலேயே அனைத்து கதாபாத்திரங்களும் இந்த படத்தில் இடம் பெற போகிறார்களாம்.
தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 1965களில் வாழ்த்த மொழிப்போர் தியாகியின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் நிலையில், தனுஷ் நடிக்கும் படமோ 1970களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் உருவாகிறது.