மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
மியூசிக் மாஸ்டர் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதி மன்றத்தில் காப்புரிமை வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ''இளையராஜா இசையமைத்த 109 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் அந்த படங்களின் பின்னணி இசையின் காப்பு உரிமையை இளையராஜாவின் மனைவி நடத்தும் இசை நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளோம். எனவே, எங்களது அனுமதி இல்லாமல், அந்த பாடல்களை யு-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இளையராஜா பதில் மனு தாக்கல் செய்தார். அதில் ''இந்த படங்களின் உரிமையை 1997ம் ஆண்டு மனுதாரர் நிறுவனத்துக்கு வழங்கும்போது, யு-டியூப், சமூக வலைதளங்கள் என்று எதுவும் இல்லை. அதனால், பாடல்கள், பின்னணி இசை உரிமம் மட்டுமே மனுதாரர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு இளையராஜா நேரில் ஆஜரானார். அவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் ''1968-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். இயக்குனர் பாரதிராஜா அறையில் அண்ணன் பாஸ்கருடன் தங்கினேன். தயாரிப்பாளர் சங்கிலி முருகனை சந்தித்து நாடகத்தில் இசையமைக்க வாய்ப்பு கேட்டோம். அவர் சினிமாவில் வாய்ப்பு உள்ளதாக கூறினார். இசை அமைப்பாளர் ஆவதற்கு முன்பு என்னவாக இருந்தேன் என்பது எனக்கு தெரியாது" என்றார்.
இதை தொடர்ந்து இளையராஜாவின் சொத்துக்கள், வருமானங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது ''எனது தொழில் இசையமைப்பது மட்டுமே. இசை மீது கொண்ட ஆர்வத்தால் ஆடம்பர வாழ்க்கையில் எனக்கு நாட்டம் இல்லை. இதனால் எந்த சொத்து எப்போது வாங்கினேன் என்பது எனக்கு தெரியாது. இசை அமைப்பது தொடர்பாக சினிமா இயக்குனர்களுடன் மட்டுமே பேசுவேன். தயாரிப்பாளர்களுடன் எனக்கு தொடர்பு இல்லை. அதனால் இசையமைக்க எவ்வளவு பணம் வாங்கினேன் என்று தெரியாது. எனக்கு சொந்தமாக அலுவலகமோ, ஸ்டூடியோவோ கிடையாது. பெயர், புகழ், செல்வம் அனைத்தும் எனக்கு இந்த சினிமாதான் தந்தது'' என்று பதில் அளித்தார்.
இளையராஜா ஒரு மணி நேரம் வாக்குமூலம் அளித்தார். பின்னர் வழக்கை நீதிமன்றம் தள்ளி வைத்தது.