ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் |

மாவீரன், 3பிஎச்கே படங்களை தயாரித்த சாந்தி டாக்கீஸ் தற்போது போடி ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறது. இதற்கிடையில் தங்களது 4வது தயாரிப்பை அறிவித்துள்ளது.
அறிமுக இயக்குநர் ஹரிஹரசுதன் இயக்கத்தில் பைனலி பாரத் இதில் கதை நாயகனாக நடிக்கிறார். யு டியூப் பிரபலமான இவர், லவ் டுடே, பிரின்ஸ், பரோல் உள்ளிட்ட சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்தர். இவரது ஜோடியாக 'குடும்பஸ்தான்' நாயகி ஷான்வி மேக்னா நடிக்கிறார்.
படம் குறித்து தயாரிப்பாளர் அருண் விஸ்வா கூறும்போது, “புதிய திறமையாளர்களையும் நல்ல கதைகளையும் ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில், பைனலி பாரத் டீன் ஏஜ் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் வெகு பரிச்சியமான நபர். இந்தப் படத்திற்காக அவருடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி.
அதுபோலவே, 'குடும்பஸ்தன்' படம் மூலம் ரசிகர்களின் அன்பைப் பெற்ற நடிகை ஷான்வி மேக்னாவும் இந்தப் படத்தில் நடிக்கிறார். இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்.
'புரொடக்ஷன் நம்பர் 4' படம் மூலம் ஹரிஹரசுதனை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமையடைகிறோம். பால சரவணன் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்குழு குறித்தான தகவல்களை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.




