Advertisement

சிறப்புச்செய்திகள்

'டகாய்ட்' பட ரிலீஸை முன்னிட்டு ஹீரோவுடன் திருப்பதி தரிசனம் செய்த மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர் | கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார் | சென்சார் போர்டின் இரட்டை நிலைப்பாடு ; தி கேரளா ஸ்டோரி இயக்குனர் குற்றச்சாட்டு | துபாயில் சிக்கிக்கொண்ட பாலிவுட் நடிகை ; உதவி கேட்டு பிரதமருக்கு கோரிக்கை | பாடலை மாதக்கணக்கில் மெருகேற்றும் ஹாரிஸ்: இயக்குனர் ஏ.எல்.விஜய் | நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன்

01 மார், 2026 - 11:15 IST
எழுத்தின் அளவு:
George-Vijay-Nelson-Exclusive-Interview
Advertisement

சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரும், சிலருக்கு தேடலுக்கு பின் கிடைக்கும். இதில் ஜார்ஜ் விஜய் நெல்சன் முதல்ரகம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக தனி டிராக்கில் நடக்க ஆரம்பித்தவரை மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக, டிவி காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்ததுடன் இதுவரை 36 படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் சினிமா தேடிக் கொடுத்துள்ளது. காமெடி வில்லனாக, குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்து வரும் இவரிடம் சண்டே ஸ்பெஷலுக்காக பேசியதிலிருந்து...
ராமநாதபுரம் பூர்விகம். அதனால் சினிமாவில் மதுரையை சேர்ந்தவர்களிடம் 'நானும் மதுரைக்காரன்தான்'என இல்லாத மீசையை தடவிக் கொடுத்து அறிமுகமாவது எப்போதும் கேலியாக இருக்கும். ஐ.பி.எஸ்., ஆக வேண்டும் என்ற கனவில் சமூகவியல் சார்ந்து 2 பட்டமேற்படிப்புகள் முடித்தேன். கல்லுாரியில் நீளம்தாண்டுதல் விளையாட்டில் கால் முறிந்ததால் எனது ஸ்போர்ட்ஸ் கனவு கலைந்தது. சின்ன, சின்னதாக சவுண்ட் எபெக்ட்ஸ் மிமிக்ரி செய்வதை அறிந்து இயக்குனர் ஸ்ரீநாத் என்னை மேடையில் ஏற்றி ஊக்கப்படுத்தினார்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்காக படித்துக்கொண்டே ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தினேன். அப்போது நண்பர்கள் மூலமாக தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வாய்ப்பு கிடைத்தது. அது, இது, எது காமெடி நிகழ்ச்சியில் 'ஒத்தரோசா' லேடி கெட்டப்பில் வற்புறுத்தி நடிக்க வைத்தார்கள். எதிர்பாராதவிதமாக பிரபலமானேன். அதில் கிடைத்த முகவரியால் தொழிலும் விரிவடைந்தது. தொடர்ந்து டி.வி., நிகழ்ச்சிகளில் நடித்துக்கொண்டே தொழிலையும் கவனித்தேன். ஒரு நாள் நண்பர் ஒருவர் போன் செய்து 'மணிரத்னம் படத்துல ஒரு கேரக்டர் இருக்கு, சீக்கிரம் ஆபிசுக்கு வா'எனச் சொன்னார். கிண்டலுக்கு சொல்லியிருப்பாங்க என நினைப் போடு அங்கு சென்றேன். பிறகு தான் கடவுள் அருளால் உண்மையாகவே அழைக்கப்பட்டேன் என உணர்ந்தேன்.

'கடல்' படத்தில் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்தில் எனக்கான முதல் டயலாக் 'ஸ்தோத்திரம் பாதர்'என சொல்ல வேண்டும் எனச் சொன்னார்கள். அது எனக்கு சென்டிமென்ட்டாக அமைந்தது. அதன்பின் மாரி, விக்ரம் வேதா, தும்பா என துவங்கி டீசல், லோகா வரை 36 படம் நடித்துவிட்டேன். சினிமாவில் டெக்னீசியன், மேக்கிங், ஸ்டண்ட் என வெளித்தெரியாத கலைஞர்கள்தான் உண்மையான ஹீரோ.

பழைய திரைப்படங்களை விரும்பி பார்ப்பேன். அதில் ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, மணிவண்ணன், இளவரசு, தம்பி ராமையா போல் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. அந்த டிராக்கில்தான் சென்றுக்கொண்டிருக்கிறேன். இன்னும் கொடூரமான சைக்கோ வில்லன் போன்ற வித்தியாசமான கேரக்டர்கள் செய்யவும் ஆசை. இதை சொல்வதால் நான் தைரியமான ஆளென்று நினைத்து விடாதீர்கள். கொஞ்சம் பயந்த சுபாவம்.

இத்தனை ஆண்டு சினிமா பயணத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, தேதி பிரச்னையால் தவறிபோனது தான் வருத்தமான விஷயம். எதிர்பார்ப்புகள்தான் ஏமாற்றம் தரும் என்பதால் விருதுகளுக்கு நான் ஆசைப்பட்டதில்லை. இன்ஸ்டா, யுடியூப், பேஸ்புக் என டிரெண்டிங்கில் உள்ளவர் களிடம் நடிகர்களை சினிமாக்காரர்கள் தேடுகிறார்கள். பழைய நடிகர்களை கண்டுகொள்வதில்லை. இந்த நிலை மாறவேண்டும்.

எனது நடிப்புக்கு முதல் கமெண்ட் அம்மா, அப்பாவிடம் இருந்து வருவது ஏதோ பெரிய அவார்டு கொடுத்ததுபோல் இருக்கும். நடிகனாக அல்லாமல் சாதாரண மனிதனாக எனக்குள் நிறைய ஆசைகள், கோபம் உள்ளது. அதை திரைவடிவில் வெளிக்கொண்டுவர வாய்ப்பும், தயாரிப்பாளரும் கிடைத்தால் சினிமா இயக்குவேன் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்!போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap