பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது, முதல்வர் விஜய்க்கு வாழ்த்து கூறியதுடன், சுமார் 25 ஆண்டு தலைமுறை இடைவெளிகொண்ட விஜய் முதல்வர் ஆனால் எனக்கு ஏன் பொறாமை? ஒருவேளை கமல் முதல்வர் ஆகி இருந்தால் கூட பொறாமை வந்திருக்கலாம் என்றும் பேசியிருந்தார்.
இது குறித்தும், முதல்வர் விஜயின் ஆட்சி குறித்தும் மதுரை விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், ''முதல்வர் விஜய் புதியவர்; அவருக்கு 6 மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும். புதிதாக வந்தவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது, அதேநேரம் அதிகம் எதிர்பார்ப்பதும் கூடாது. அவருக்கு ஓட்டுப்போட்ட நீங்கள் தான் எப்படி ஆட்சி செய்கிறார் என்பதை பார்க்கவேண்டும். எனக்கும் ரஜினிக்கும் இடையே இருப்பது போட்டிதான்; ஒருபோதும் பொறாமை இருந்தது கிடையாது. இருவருக்குள்ளும் இருக்கும் நட்புறவு சினிமாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். நாங்கள் கிரிக்கெட் விளையாடினாலும் இதே நட்புணர்வுடன் தான் இருந்திருப்போம்'' என்றார்.