ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

நடிகை ஜெய் கடந்த 22 வருடங்களாக தமிழ் சினிமா படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 'சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சென்னை 28' என அவர் திரைப்பயணத்தில் முக்கியமான படங்கள் இருந்தாலும், அவர் இன்னும் வெற்றிக்காக ஓடிக்கொண்டு தான் இருக்கிறார்.
சமீபத்தில் ஜெய் அளித்த பேட்டியில் அவரிடம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, "சுப்பிரமணியபுரம் வெளியான உடன் என்னை தேடி வந்த முதல் பெரிய இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தான். என்னை சந்தித்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் கதையை கூறினார். எனக்கும் கதை பிடித்திருந்தது. ஆனால், சுப்பிரமணியபுரம் வெளியாகுவதற்கு முன்பு நான் சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி விட்டேன். கவுதம் வாசுதேவ் மேனன் மாதிரி ஒரு பெரிய இயக்குனர் அழைத்தார் என்பதற்காக அந்த படங்களை அப்படியே விட்டு போவது சரியில்லை எனப் பட்டது. அதனால் தான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க முடியவில்லை." என்பதை பகிர்ந்து கொண்டார் ஜெய்.