
போட்டோகிராபர் படம் மூலம் இயக்குனரான பைலட்
ஜூன் 18, 2026
Advertisement
டாக்டர்கள், என்ஜினீயர்கள் சினிமா நடிகராகி விடுவது வழக்கமான ஒன்று. அதேபோல விமான பணிபெண்கள் பலர் ஹீரோயின் ஆகியிருக்கிறார்கள். என்றாலும் விமான பைலட்கள் நடிகராவது மிக அரிது. அந்த வகையில் "ரா" என்ற படத்தின் மூலம் ஹீரோவானவர் அஷ்ரப். தற்போது "போட்டோகிராபர்" என்ற படத்தில் நாயகனாக நடித்திருப்பதோடு, அவரே படத்தை இயக்கவும் செய்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஜனனி நடித்துள்ளார். "சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர்" பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது.
கருணாகரன், ஆடுகளம் நரேன், "உறியடி" சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா நடித்துள்ளனர். படத்திற்கு ரயீஸ் அகமது ஒளிப்பதிவு செய்கிறார், ராஜ்குமார் சந்திரசேகன் இசை அமைக்கிறார். ஏபிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். அப்துல் பாசித் தயாரிக்கிறார்.
படம் பற்றி அஷ்ரப் கூறும்போது, ""கதையின் நாயகன் ஒரு "வைல்ட்" போட்டோகிராபர். "மதிகெட்டான் சோலை" என்ற மலைகிராமத்திற்கு தனது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒரு அரிய இயற்கை நிகழ்வைப் புகைப்படம் எடுக்க முயல்கிறான். ஆனால், அவனது அந்த தேடல் ஒரு கட்டத்தில் அவனது உயிர் பிழைப்பிற்கான வேட்டையாக மாறுகிறது. அதன் பின் நடப்பதை திரில்லுடன் சொல்கிறது படம்” என்றார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!