
ராதிகா ஆப்தே சர்ச்சை குறித்து மவுனம் கலைத்த கீர்த்தி சுரேஷ்!
தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள "சத்தியவான் சாவித்திரி" படம் நவம்பர் 20ம் தேதியான நாளை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியின்போது, "அக்கா" என்ற நெட்பிளிக்ஸ் வெப் சீரிஸின் விளம்பர நிகழ்வில், ராதிகா ஆப்தே தெரிவித்த கருத்து குறித்து கீர்த்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதாவது, ஒரு படத்தில் தனது தாய்மாமனைத் திருமணம் செய்துகொள்ளும் கதாபாத்திரத்தில் நடிக்குமாறு தன்னிடம் கேட்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அப்போது ராதிகாவுக்கு அருகில் அமர்ந்திருந்த கீர்த்தி சுரேஷ், முதலில் சிரித்துவிட்டு, பின்னர் மாமாவைத் திருமணம் செய்துகொள்வது என்பது தமிழ் மற்றும் தெலுங்கு கலாசாரத்தில் மிகவும் சகஜமான ஒன்று என்று கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தெலுங்கு ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு, இணையத்தில் அவருக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தன. உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்திற்கு கீர்த்தி இவ்வாறு பதிலளித்தது பல பார்வையாளர்களை வருத்தமடையச் செய்ததுடன், கேள்விகளையும் எழுப்பியது.
இந்நிலையில், தான் ஏன் அவ்வாறு எதிர்வினையாற்றினேன் என்பதற்கு கீர்த்தி சுரேஷ் தற்போது விளக்கமளித்துள்ளார். படத்தில் மாமாவைத் திருமணம் செய்துகொள்வது குறித்து ராதிகா முதலில் பேசியபோது, அவர் என்ன சொல்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் பின்பற்றப்படும் ஒரு பாரம்பரியத்தைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பதை நான் சற்று தாமதமாகவே புரிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ள கீர்த்தி சுரேஷ், தான் ஒருபோதும் தனது சொந்தக் கலாசாரத்தைக் குறைத்து மதிப்பிட மாட்டேன் என்றும், கேரளாவில் இந்த வழக்கம் பின்பற்றப்படுவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…