ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் | பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் |

சூர்யா, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 'கருப்பு'. இப்படம் திட்டமிட்டபடி மே 14ம் தேதி வெளியாகாமல் மே 15ம் தேதிதான் வெளியானது. ஒரு நாள் தள்ளிப் போனாலும் படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 2026ம் வருடத்தில் முதல் நாளில் அதிக வசூலைக் கொடுத்த படமாக இப்படம் அமைந்துள்ளது. உலகம் முழுவதும் முதல் நாளில் சுமார் 25 கோடி வசூல் வந்திருக்கலாம் என்றார்கள். தற்போது இரண்டாம் நாள் வசூல் முதல் நாளை விட சில கோடிகள் அதிகமாக அமைந்திருக்கிறது என்ற தகவல் வந்துள்ளது.
அதன் மூலம் இரண்டே நாட்களில் இப்படம் 50 கோடி வசூலைக் கடந்திருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பாக்ஸ் ஆபீஸ் அப்டேட். இன்றும் விடுமுறை தினம் என்பதால் இன்றும் வசூல் நன்றாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
இந்த ஆண்டின் முதல் பெரிய வெற்றியாக இந்தப் படம் அமையலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது அடுத்த வரும் நாட்களின் வசூலைப் பொறுத்து அமையும்.