Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: ஒரே திரைப்படத்தில் தன் இருபெரும் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்ட கே பாக்யராஜ் | லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி”

17 மே, 2026 - 05:48 IST
எழுத்தின் அளவு:
Flashback-TR-Ramachandrans-Sabapathy-delivers-a-hilarious-comedy-about-demanding-a-pay-raise
Advertisement


தமிழ் திரைப்பட உலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வந்தவர்தான் நடிகர் டி ஆர் ராமச்சந்திரன். 1938ம் ஆண்டு நடிகர் பி யூ சின்னப்பா நடித்து வெளிவந்த “நந்தகுமார்” என்ற திரைப்படத்தின் மூலம் கலையுலகிற்கு அறிமுகமாகி, கதாநாயகனாக, நகைச்சுவை நடிகராக, துணை நடிகராக என பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர். துரு துரு விழிகளுடன் ஒரு பதற்றம் கலந்த அப்பாவித்தனமான நகைச்சுவை பாணியைக் கையாண்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர் கதையின் நாயகனாக நடித்து, 1941ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம்தான் “சபாபதி”.

பம்மல் சம்பந்த முதலியாரின் சமூக நாடகமான இந்த “சபாபதி”யை தனது “பிரகதி பிக்சர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஒரு நகைச்சுவைத் திரைப்படமாக தயாரித்து, இயக்கி வெளியிட்டிருந்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். “சபாபதி” படப்பிடிப்பின் போது, ஏ வி மெய்யப்ப செட்டியாரிடம் சென்று, முதலாளி சார், இப்போது நான் கதாநாயகனாக நடித்து வருகின்றேன். மாதச் சம்பளத்தை எனக்குக் கூட்டித் தரவேண்டும் என நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் கேட்க, 'ஆகட்டும்' என சொல்லியிருக்கின்றார் ஏ வி மெய்யப்ப செட்டியார். மாதம் முடிந்தது. சம்பளக் கவரும் வந்தது. வழக்கமான சம்பளத் தொகையுடன் கூடுதலாக இரண்டு ரூபாய் ஐம்பது பைசா சேர்த்து எழுபது ரூபாய் இருந்தது சம்பளக் கவரில்.

“சபாபதி” படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதங்கள்தான் நடந்தது. படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் டி ஆர் ராமச்சந்திரன் நடிப்பிற்கு ஊதியமாக பெற்றுக் கொண்ட தொகை நூற்றி நாற்பது ரூபாய். கதாநாயகி பத்மா நடிப்பிற்காக பெற்ற ஊதியம் மாதம் ரூபாய் நாற்பத்தைந்து. டி ஆர் ராமச்சந்திரன், பத்மா, காளி என் ரத்தினம், சி டி ராஜகாந்தம், கே சாரங்கபாணி ஆகியோர் நடித்து, ஏ வி மெய்யப்ப செட்டியார் தனது “பிரகதி பிக்சர்ஸ்” மூலம் தயாரித்து இயக்கியிருந்த இந்த “சபாபதி” திரைப்படம் 1941ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல்அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு ... சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap