லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்? | பிரபல பாலிவுட் நடிகரின் மனைவியிடம் 16 கோடி மோசடி | பிளாஷ்பேக் : நடனத்திற்காக அஞ்சலிதேவி நடித்த படம் | நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் |

தயாரிப்பாளர் கே.ராஜன், 'பிரம்மச்சாரிகள்' (1983) என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராகத் தனது திரைவாழ்க்கையைத் துவங்கினார். 1991இல், நிழல்கள் ரவி மற்றும் சரத்குமார் நடித்த 'நம்ம ஊரு மாரியம்மா' திரைப்படத்தை இயக்கிய அவர் , இயக்குனர் செந்தில்நாதனுக்காக 'தங்கமான தங்கச்சி' படத்திற்கு எழுத்தாளராகப் பணியாற்றினார்.
சென்னை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். சமீப ஆண்டுகளாக சினிமா விழா, பொது மேடைகளில் தமிழ் சினிமா குறித்து அவ்வபோது துணிச்சலாக பேசி வந்தார். சிறிய பட்ஜெட் படங்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவர், பெரிய நடிகர்களின் சம்பளம் குறித்தும் விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று (மே 17) மாலை சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு வயது 85. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.