‛ஹேப்பி ராஜ்" படத்திற்கு பின்னர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛இம்மார்டல்". இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். புதுமுகம் மாரியப்பன் சின்னா இயக்க, சாம் சிஎஸ் இசையமைக்கிறார். ஒரு வீட்டில் நடக்கும் ஹாரர் திரில்லர் தான் படத்தின் கதை. அதன் உடன் ஜிவி பிரகாஷ், கயாடு இடையேயான காதலும் உள்ளது. காதல் கலந்த ஹாரர் திரில்லராக உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வந்தன. ஏற்கனவே படத்தின் டீசரும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற ஜூலை 23ல் ரிலீஸாகிறது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!