
முன்னணி இளம் ஹீரோயின் யார்? அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் இடையே கடும் போட்டி
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கால கட்டத்திலும் சில ஹீரோயின்கள் முன்னணியில் இருப்பார்கள். சிலர் தொடர்ச்சியாக ஹிட் கொடுப்பார்கள். இப்போதைக்கு முன்னணி நடிகை, நம்பர் 1 நடிகை என யாரும் இல்லை. ஆனால், சமீபகால படவரிசை, வெற்றிக்கு மூலமாக அனிஷ்மா, மமிதா, கயாடு லோஹர் ஆகியோர் முன்னணி இளம் ஹீரோயின் இடத்தை பிடிக்க போட்டி போடுகிறார்கள். கேரளாவை சேர்ந்த அனிஷ்மா நடித்த "சிறை, யூத், மொதராத்திரி" படங்கள் ஹிட்டாகி உள்ளது. இதனால், அவர் மார்க்கெட் ஏறி உள்ளது. கவர்ச்சி அல்லாத, இளம் ஹீரோயின் கதைகளில் அவரை நடிக்க வைக்க ஆர்வம் காண்பிக்கிறார்கள். இப்போது மாரி செல்வராஜ் தயாரிக்கும் "மாகாளி" படத்தில் அனிஷ்மா நடித்து வருகிறார்.
"பிரேமலு" வெற்றியை தொடர்ந்து மமிதா பைஜூக்கு தமிழிலும் நல்ல மார்க்கெட். "டியூட்" பெரிய ஹிட், "கர" ஓடவில்லை. "ஜனநாயகன்" சுமார் ரகம், "விஸ்வநாத் அன்ட் சன்ஸ்" வெற்றி பெற்றுள்ளது. மலையாளத்தில் அவர் நடித்த "பெத்லகேம் குடும்ப யூனிட்" படத்துக்கும் தமிழகத்தில் வரவேற்பு. அவருக்கும் கோலிவுட்டில் நல்ல வரவேற்பு. அவர் நடிப்பில் "இரண்டு வானம்" வர உள்ளது.
அடுத்ததாக கவர்ச்சியான நடிப்பில் கயாடு லோஹர் முன்னணியில் இருக்கிறார். அவர் நடித்த "இதயம் முரளி" பெரிதாக ஓடவில்லை. "டிராகன்" பெரிய ஹிட். "இம்மார்டல்" ஓகே ரகம். ஆனாலும், கயாடுக்கு நல்ல மவுசு இருக்கிறது. இப்போது ஞானவேல் இயக்க, சூர்யா நடிக்கும் படம், மாரி செல்வராஜ் இயக்கும் "மஞ்சணத்தி" உள்ளிட்ட படங்களில் கயாடு நடித்து வருகிறார். இவர்களை தவிர "கட்டா குஸ்தி 2" வெற்றியால் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் நல்ல பெயர் உள்ளது. இந்த நால்வருக்கும் இடையில் போட்டி நிலவுகிறது. கயாடு தவிர, மற்ற மூவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!