
கதை தேர்வில் தவறு செய்ததை ஒப்புக்கொண்ட ஸ்ரீலீலா
ஆனால், 25 வயதில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. தற்போது அவரது கைவசம் பெரிய தெலுங்குப் படங்கள் எதுவும் இல்லை. தமிழ் மற்றும் ஹிந்தித் திரையுலகில் தனது திரைப்பயணத்தை விரிவுபடுத்து வதில் அவர் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் நடித்துள்ள ஓம் படத்தில் நடித்து முடித்துள்ள அவர், ரஜினியின் தர்மன், அஜித்தின் டேர் டெவில் படங்களிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில், கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாகத் தனது அறிமுகப் படத்தில் நடித்து வருவதுடன், மற்றொரு ஹிந்திப் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், தனது திரைப்பயணத்தின் ஆரம்பக் காலத்தில் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறு செய்து விட்டதாக ஸ்ரீலீலா வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். எனது இளம் வயதில், என் திரைப்பயணத்தைப் பொறுத்தவரை நான் சில தவறுகளையும், தவறான முடிவுகளையும் எடுத்துவிட்டேன். என்னைத் தேடி வந்த எல்லாப் படங்களிலும் கையெழுத்திட்டேன். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும், சில படங்களைத் தவிர்த்திருக்க வேண்டும் என்றும் தோன்றுகிறது என அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
தெலுங்கில் அவர் நடித்த கடைசி நான்கு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தன. இது திரையுலகில் அவரது இடத்தைத் தெளிவாகப் பாதித்துள்ளது. தான் எங்கே தவறு செய்தோம் என்பதை அவர் தற்போது புரிந்து கொண்டுள்ளார் என்பதையே அவரது இந்த ஒப்புதல் வாக்குமூலம் காட்டுகிறது. இந்தத் தெளிவு, அவர் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுக்கவும், தெலுங்கு சினிமாவில் மீண்டும் வலுவாகத் திரும்பவும் உதவுமா? என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்.

















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…