ஜெயிலர் 2 : முன்பதிவு ஆரம்பம்
அக் 10, 2026
Advertisement
நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்ஜே சூர்யா, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன் மற்றும் பலர் நடிப்பில் அக்டோபர் 15ல் வெளியாக உள்ள படம் "ஜெயிலர் 2".
இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது குறிப்பிட்ட சில தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. அடுத்தடுத்து மேலும் பல தியேட்டர்கள் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அக்டோபர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ரஜினிகாந்த் ரசிகர்கள் படத்தை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவார்கள். அதற்கடுத்து நான்கு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கான முன்பதிவும், வசூலும் தொய்வில்லாமல் இருக்க வாய்ப்புள்ளது.
இப்படத்தின் முந்தைய பாகமான "ஜெயிலர்" மற்றும் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் படமான "2.0" ஆகிய படங்களின் வசூலை முறியடித்து இந்தப் படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடியைப் பெறுமா என்ற கேள்வி மற்ற திரையுலகினரிடமும் உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!