
அனிருத் திருமண வரவேற்பு : கலந்து கொள்ளாத தனுஷ்?
தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி, தனுஷ் நடித்த "3" படத்தில்தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்டார். அப்படத்தில் இடம் பெற்ற "ஒய் திஸ் கொலவெறி" பாடல் ஓவர்நைட்டில் உலகப் புகழ் பெற்றது.
கிரிஸீல் நடைபெற்ற அனிருத்தின் திருமணத்தில் தனுஷ் மகன்கள் கலந்து கொண்டனர். நேற்று சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை.
இரண்டு தினங்களுக்கு முன்பு திரையுலகில் வந்து 15 ஆண்டுகள் ஆனதையொட்டி ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் அனிருத். அதில் கூட தனுஷ் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
இப்போது அவரது திருமணத்திற்கும், திருமண வரவேற்புக்கும் தனுஷ் அழைக்கப்பட்டாரா அல்லது அழைக்கப்பட்டும் தனுஷ் தவிர்த்தாரா என்பது குறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் தனது 56வது படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் மதுரை சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவரது ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.




















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…