
ராஷ்மிகாவின் ‛மைசா ரிலீஸ் தள்ளி வைப்பு
சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இம்மாதம் நவ., 27ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். இதுதொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிக்கை : ‛‛தொழில்நுட்ப ரீதியாக எந்த சமரசமும் இன்றி, திரையரங்குகளில் சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளோம். நவ., 27ல் மைசா படம் வெளிவராது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்களது தொடர்ச்சியான அன்பு, பொறுமை மற்றும் ஆதரவிற்கு நன்றி. உங்களது காத்திருப்பு நீண்டகாலம் இருக்காது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்"" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுமையாக நிறைவடையாத காரணத்தால் ரிலீஸ் தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…