
தீபாவளிக்கு தள்ளிப்போன விஜய் ஆண்டனியின் ‛அப்பா குட்டி
தந்தை - மகள் இடையேயான உணர்வுப்பூர்வமான பாசப் பிணைப்பைக் மையமாக வைத்து ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்தபடம் அடுத்தவாரம் அக்., 16ல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினத்திற்கு முதல்நாள் ரஜினியின் ‛ஜெயிலர் 2" வருகிறது. இதனால் இந்த படத்திற்கு குறைந்த அளவிலான தியேட்டர்களே கிடைக்கும் சூழல். இதனால் படம் தள்ளிப் போகலாம் என செய்தி வந்தது. இப்போது படத்தை தீபாவளி வெளியீடாக நவம்பர் 6ம் தேதி ரிலீஸ் வெளியிடுவதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய ரிலீஸ் தேதி போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…