
இம்மார்டலை தொடந்து புறக்கணிக்கும் கயாடு லோகர்
மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் "இம்மார்டல்" பட நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய ஜி.வி.பிரகாஷ், ""படம் பார்ப்பவர்களுக்கு பயம் வருமா. படம் வெற்றி அடையுமா என பயந்தோம். ஆனால் நாளுக்கு நாள் தியேட்டர் எண்ணிக்கை அதிகரித்தது. பல ஊர்களில் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் வந்தது. இப்போது படம் ஹிட். இந்த படத்தின் வெற்றிக்கு சாம் சி.எஸ் இசையும் ஒரு காரணம்"" என்றார்.
ஹீரோ, இயக்குனர், இசையமைப்பாளருக்கு தயாரிப்பாளர் பரிசளித்தார். ஹீரோவுக்கு பைக் கொடுத்தார். இதற்கு முன்பு நடந்த இம்மார்டல் நிகழ்ச்சிகளை ஹீரோயின் கயாடு லோகர் கலந்து கொள்ளவில்லை. நேற்றும் வரவில்லை. படக்குழுவுக்கும் அவருக்கும் என்ன பிரச்னை என யாருக்கும் பிடிபடவில்லை. என்ன பிரச்னை என கயாடு பேசுவாரா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!