Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: குறைவான நாட்களில் தயாராகி நிறைவான வெற்றியைப் பதிவு செய்த “முகராசி” | ஏப்ரல் 17ல் ரீ ரிலீஸ் ஆகும் சீமானின் 'தம்பி' | 'ஜியோ' படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது! | மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மோகன்! | 'புஷ்பா 2'வில் நடித்த காட்சிகள் இல்லை! - திவி வத்யா | மார்டன் வில்லி மகாலட்சுமி | பழிவாங்க முடிவெடுத்த தளபதி நடிகர் | விட்டதை வட்டியும் முதலுமாக வசூலிக்கும் அமரன் | கனடாவில் 'துரந்தர் 2' படம் திரையிட்ட தியேட்டர் ஸ்கிரீனை கிழித்த ரசிகர்கள் | கஞ்சா வழக்கில் கைதான இயக்குனர் படத்தில் நடிப்பதா? மம்முட்டிக்கு நடிகர் ஹரீஷ் பெராடி கேள்வி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

மார்டன் வில்லி மகாலட்சுமி

22 மார், 2026 - 11:49 IST
எழுத்தின் அளவு:
Sunday-Special
Advertisement


மகாநதி, சின்ன மருமகள் டி.வி.சீரியலில் வில்லி, சாதனை பெண் தொழில் முனைவோர் என இரட்டை குதிரை பூட்டிய சாரட்டு வண்டியை திறமையாக ஓட்டும் சாரதி மகாலட்சுமி.

பிரைடல் பேஷன் டிசைனிங், காஸ்ட்யூம் டிசைனிங்கில் கலக்கிவரும் இவரை மதுரை அம்மன் சன்னதி தெருவில் அடிக்கடி பார்க்க முடியும். அட 'நம்ம ஊரு பொண்ணாமா நீ, சீரியல்ல பின்னி எடுக்குற. வீட்டுக்கு சாப்பிட வா மா' என கடைக்கு வந்திருந்தவர்கள் அவரிடம் வாஞ்சைக் காட்டிய நேரத்தில் சண்டே ஸ்பெஷலுக்காக பேசினோம்.

அவர் கூறியதிலிருந்து...

எந்த ஊருக்கு போனாலும் சொந்த ஊர் பாசம் மாதிரி எங்கேயும் வராது. அதற்காக முதலில் நன்றி சொல்கிறேன். நேர்த்தியாக உடை அணிவதில் சிறுவயதிலிருந்தே ஆர்வம். எந்த உடை அணிந்தாலும் வித்தியாசம், நவநாகரீகம், கற்பனை கலந்திருப்பது பிடிக்கும்.

கணவர், மெட்டீரியல் பிசினஸ் செய்வதால் ஆர்டர்கள், கஸ்டமர்கள் கிடைப்பது ஆரி பிளவுஸ், டிசைனர் ஒர்க் செய்யும் எனது தொழிலுக்கு உதவியாக இருக்கிறது. நண்பர் மூலமாக சீரியல் ஷூட்டிங்கில் ஹீரோயினுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதற்காக சென்னை சென்றபோது 'கெஸ்ட் ரோலில்' நடிக்க வைத்தனர். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அடுத்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடிக்க அழைத்தனர்.

கிடைத்த வாய்ப்பில் புது அனுபவங்களை கற்றுக்கொள்ள நடித்தேன். கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ற நடிப்பை வெளிப்படுத்துகிறேன். இதனால் வெளியில் என்னை பார்ப்பவர்கள் கூட டி.வி., சீரியலில் என் கதாபாத்திர தன்மையோடு பார்ப்பதும் ஒருவித பாராட்டாக தெரிகிறது. மூத்த நடிகர்கள் ஓ.ஏ.கே. சுந்தர், வி.ஆர்.திலகம், சிவகவிதா உள்ளிட்டோரின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன்.

அர்ப்பணிப்பு, நடிப்பு ஒழுக்கம், நேரந்தவறாமை என அவர்கள் ஒவ்வொருவரும் எனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசான்கள். லியோ படத்தில் சின்ன ரோல் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். இனி சின்ன ரோல்களை தவிர்த்து சினிமாவில் முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்புகள் வந்தால் நடிக்கலாம் என நினைக்கிறேன். சீரியலில் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை.

இங்கு அவரவர் முயற்சிக்கும் திறமைக்கும் ஏற்ற வாய்ப்புகள் நிறையக் கிடைக்கிறது. அதில் வெற்றி தோல்வியை தீர்மானித்து உங்களின் உயரத்தை நீங்களே நிலைநிறுத்த வேண்டும். சீரியலில் நடிக்க, ஆரம்பத்தில் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிப்பென்று வந்தபின் நிறைய சுக, துக்கங்களுக்கு செல்ல முடியவில்லை.

நடுத்தர பெண்ணாக தொழில், நடிப்பு, குடும்பம் என மூன்று பக்கத்தையும் சமாளிப்பது சிரமமான விஷயம்தான். கணவரும், மகனும் எனக்கு உறுதுணையாக இருப்பதால் எனக்கு எல்லா கஷ்டங்களும் சுபத்துடனே முடிந்தது. ஆபத்துகளிலும் தர்ம சங்கடமான நிலைகளிலும் எனக்கு விழும் எல்லா 'அடி'களையும் தாங்கும் கார்டியன் ஏஞ்சல் எனது கணவர் என்பதால் அவார்டோ, பாராட்டோ அதை அவருக்குத்தான் சொந்தமாக்க வேண்டும் எனச் சொல்லி சிரித்துக் கொண்டார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன்எதிர்காலத்தில் 'சைபர் விசா' ... விட்டதை வட்டியும் முதலுமாக வசூலிக்கும் அமரன் விட்டதை வட்டியும் முதலுமாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap