ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி |

மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் சென்று விடும் இவர் அங்கு வரும் நடிகர், நடிகைகளுடன் போட்டோ எடுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அடிக்கடி படப்பிடிப்புகளில் இவரை பார்த்த படக்குழுவினரும் கூட்டத்துடன் கூட்டமாக நிற்க வைத்தும், ஓரிரு வசனங்கள் சொல்லி கொடுத்தும் நடிக்க வைத்துள்ளனர். அப்படி நடிக்க தெரியாமலேயே 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். இவர் மதுரையைச் சேர்ந்த வளரும் கலைஞர் நடிகர் சங்கர்.
டி.எஸ்.பி., படத்தில் 'தொப்பையை தள்ளி வைய்யா' என இவரை பார்த்து நடிகர் விஜய்சேதுபதி கூறுவது உள்ளிட்ட அவருடன் தொடர்ந்து வரும் சில காட்சிகள், 'தலைவன் தலைவி' படத்தில் குழந்தைக்கு காது குத்த செல்லும் கோயிலில் விஜய்சேதுபதி, நித்யாமேனன் குடும்பத்தினர் சண்டையிட்டு கொள்ளும் போது சண்டையை விட்டுட்டு சாமி கும்பிட வாங்கய்யா எனக்கூறும் பூஜாரியாக நடித்ததும் தன்னை மக்களிடம் அறிமுகப் படுத்தியிருப்பதாக கூறும் சங்கர், தொழில் முனைவோராகவும் திகழ்கிறார்.
'சலுான், மொய்விருந்து, ரோஜா மல்லி கனகாம்பரம், எல்லாம் பொருத்தம்' என விரைவில் வெளிவரவுள்ள அரை டஜன் படங்களிலும் தலைகாட்டியிருப்பதாக கெத்து காட்டுகிறார் சங்கர்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் கூறியதிலிருந்து...
நான் பிறந்து வளர்ந்தது மதுரை. ஒன்பதாம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படித்தேன். பிறகு படிப்பு ஏறவில்லை. கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அப்பா கதிரேசன், அம்மா சண்முகவள்ளி எனக்கு செல்லம் கொடுத்து என் போக்கிலேயே விட்டு விட்டனர்.
படிப்பு தான் வரவில்லை என தொழிலை ஓரளவு கற்றுக் கொண்டதால் 19 வயதிலேயே மாடுலர் கிச்சன் அப்ளையன்ஸ் நிறுவனத்தை துவங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறேன். திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
பள்ளியில் படிக்கும் போதே வகுப்புகளுக்கு கட் அடித்து விட்டு நண்பர்களுடன் சினிமாவுக்கு செல்வேன். பிறகு சினிமா எப்படி வருகிறது என அறிந்து கொள்ளும் ஆசையில் படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் சென்று விடுவேன். முதலில் மஞ்சதண்ணீர் என்ற குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது.
படப்பிடிப்புகளை பார்க்க சென்ற போது ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குனர்கள் பாண்டியராஜ், பொன்ராம், நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, விமல் போன்றோரின் அறிமுகமும் கிடைத்தது.
அவர்கள் தங்கள் படங்களில் என்னை ஓரிரு காட்சிகளில் நடிக்க வைத்தனர். ரஜினிமுருகன், மாப்பிள்ளை சிங்கம் என பல படங்களில் நடித்த போது, இப்படி தான் நடிக்க வேண்டும் எனத் தெரியாது. ஆனால் அதற்கு பிறகு நடிகர்கள், இயக்குனர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்று கூத்துப்பட்டறையில் சில நாட்கள் பயிற்சி எடுத்து கொண்டேன். அதற்கு பிறகு நல்லதோர் வீணை செய்வோம் போன்ற படங்களில் நன்றாக நடித்தேன்.
காமெடியுடன் கூடிய கேரக்டர் ரோல்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என் திரைப்பயணம் தொடருகிறது என்றார் உற்சாகத்துடன்.