2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

'ஏங்கண்ணா... அவார்டு எல்லாம் வாங்கியிருக்கீங்க. எனக்கும் ஒரு 'சான்ஸ்' இருந்தா கொடுங்கண்ணா. நிக்கிற மாதிரி சீன் இருந்தா போதும்' என விளையாட்டாக கேட்க, 3 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கனவு நனவானது சாவித்திரிக்கு. யுடியூப் சேனல் வீடியோக்கள் மூலம் நடிப்பில் கால் பதித்தவர், இன்று வெள்ளித்திரையில் 15 படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக பேசுகிறார்...
''நான் கோவை சிங்காநல்லுாருங்க. கணவர் செந்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். ஆரம்பத்தில் ஜவுளி, நகை கடையில் வேலை செய்தேன். 'விசாரணை' படத்தில் திரைக்கதை எழுதிய சந்திரகுமார், எங்க ஏரியாக்காரர். ஏற்கனவே அறிமுகம் இருந்தது. 'விசாரணை' படத்திற்கு விருது கிடைத்ததும், அவரை பாராட்டினேன். அப்போது விளையாட்டாக நடிக்க சான்ஸ் கேட்டேன். அதை நினைவில் வைத்து 2018ல் சேத்துமான் பட இயக்குநர் தமிழிடம் என் போன் நம்பரை கொடுத்துள்ளார்.
அந்த படம்தான் எனக்கு சினிமா வாசலை திறந்தது. இதுவரை குரங்குபெடல், மாமன் உட்பட 15 படங்களில் நடித்துவிட்டேன். சமீபத்தில் வெளியான 'தலைவர் தம்பி தலைமையில்' படம் நல்லா 'ரீச்' ஆனது. பெரும்பாலும் அம்மா, சித்தி, அத்தை கேரக்டர்தான் கிடைக்கிறது. இப்போதுகூட ஒரு படத்தில் ஊர்வசிக்கு தங்கையாக நடிக்கிறேன்.
சினிமாவுக்காக நான் சென்னையில் தங்கவில்லை. கோயம்புத்துாரில் இருந்து ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு சென்றுவருகிறேன். எனக்கு அது சிரமமாக இல்லை. விஜய்சேதுபதியுடன் 'தலைவன் தலைவி' படத்தில் நடித்த போது சின்ன டயலாக் பேச வாய்ப்பு கிடைத்தது. அதையே நான் சூப்பரா பேசியதாக விஜய் சேதுபதி பாராட்டினார். 'சார் கிண்டல் பண்ணாதீங்க' என சிரித்தேன். 'முகபாவனையோடு டயலாக் பேசியது சூப்பராக இருந்தது' என அவர் சொன்னது விருது வாங்குற மாதிரி இருந்தது.
நான் நடிகையாக வேண்டும் என்று நினைத்ததுகூட கிடையாது. சின்ன வயசுல பள்ளி ஆண்டு விழாக்களில் நடித்ததும் கிடையாது. எனக்குள் இந்த ஆசை 2015ல் ஏற்பட்டதை நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. நான் நகை கடையில் வேலை செய்தபோது புத்தக பதிப்பகம் ஒன்றை சேர்ந்த கதிர்வேல் என்பவர், 'நீங்க நடந்து வரும் ஸ்டைலை பார்த்தாலே ஒரு நடிகைக்கான 'லுக்' இருக்கு. பேப்பர், பேனாவை எடுத்துவந்து 'உங்களை இன்டர்வியூ எடுக்கணும்'னு சொல்வாரு. அதை விளையாட்டா செய்றாருனு அப்போ சிரித்தேன். அது இன்று தினமலர் சண்டே ஸ்பெஷல் மூலம் நனவாயிருக்கு.
ஷூட்டிங் இல்லாத சமயத்தில் இன்றும் யுடியூப் சேனல் வீடியோக்களில் நடித்து வருகிறேன். விழிப்புணர்வு வீடியோக்களிலும் நடிக்க அழைப்பு வருகிறது. நான் உட்பட 3 பேர், 'குடும்ப சம்பவம்' என்ற யுடியூப் சேனலை சமீபத்தில் தொடங்கி 'அப்லோடு' செய்து வருகிறோம்.
'தலைவன் தலைவி' பட வெற்றி விழாவில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி 'அன்றைய நடிகையர் திலகம் சாவித்ரி போல், இந்த சாவித்ரி நடிகையர் திலகமாக வலம் வருவார்' என பாராட்டினார். அதை மேடைக்காக அவர் சொன்னாலும், சாவித்ரி அம்மா பெயரை கொண்ட நான், அவர் அளவிற்கு நடிக்காவிட்டாலும் அவர் பெயரை காப்பாற்றும் வகையிலாவது நடிக்க வேண்டும் என்ற பயம் உள்ளது'' என்கிறார் சாவித்ரி.




