'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

ஹிந்தியில் சுனில் பாண்டே இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள முதல் படம் ‛ஏக் தின்'. நடிகர் அமீர்கானின் மகன் ஜூனைத் கான் நாயகனாக நடித்திருக்கிறார். அமீர்கானே தயாரித்துள்ளார். மே 1ம் தேதியான நேற்று படம் திரைக்கு வந்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன. முதல்நாளில் திரையரங்குகளில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்ததோடு, இந்த புதிய ஜோடி நடித்துள்ள உணர்ச்சிபூர்வமான கதைக்களம் ரசிகர்களுக்கு போதிய திருப்தியை கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
அமீர்கான் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் படம் குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசினார். என்றபோதும் படத்தை விளம்பரப்படுத்துவதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்கிறார்கள். அதேசமயம் இந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் சொல்லும் பாசிட்டிவான விமர்சனங்கள் படத்தை ஓட வைக்கும் என படக்குழுவினர் நம்புகின்றனர்.