அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் |

ஒரு காலத்தில் மேடை இசை கச்சேரிகளை கடுமையாக விமர்சித்த இளையராஜா, தற்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டு ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். உலக நாடுகள் முதல் உள்ளூர்கள் வரை அவரது இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. தனது இசை அனுபவங்களையும் வெளிப்படையாக பேசி வருகிறார்.
அடுத்து சிம்பொனிக்கான இசையை உருவாக்கி வரும் இளையராஜா அதே கையோடு மகள் பவதாரிணி பெயரில் ஒரு மகளிர் இசை குழுவையும் உருவாக்கி வருகிறார்.
பவதாரிணி இளையராஜாவின் இசையில் உருவான 'ராசைய்யா' படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா... மஸ்தானா...' பாடல் மூலம் பாடகியாக சினிமாவுக்கு அறிமுகமானார். 'பாரதி' படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. அமிர்தம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இளையராஜா தன் மகள் நினைவாக, அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். அதோடு 'பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா' ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மட்டுமே இணைந்து இதனை நடத்த உள்ளார்கள். இதற்காக தனது ஸ்டூடியோவில் ஆடிசன் நடத்தி வருகிறார்.




