'ஜனநாயகன்' டிரைலர் புதிய சாதனையை ஒரே நாளில் முறியடித்த 'பராசக்தி' | கிடப்பில் போடப்பட்ட பீமன் கதையை கையில் எடுக்கும் ரிஷப் ஷெட்டி | 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்த ரிச்சர்ட் ரிஷி - நட்டி | பைக் பயணமாக தனுஷ்கோடிக்கு விசிட் அடித்த மஞ்சு வாரியர் | 20 நிமிடங்கள் வரை ட்ரிம் செய்யப்பட்ட ராஜா சாப் | ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் | அமெரிக்கா, இங்கிலாந்தில் தி ராஜா சாப் முன்பதிவில் சாதனை | 30 நாட்களில் 1,240 கோடி வசூலித்த துரந்தர் | சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி |

'கச்சேரி சேரா, ஆசை கூட' ஆகிய ஆல்பங்களின் மூலம் பிரபலமானவர் சாய் அபயங்கர். பின்னணிப் பாடகர் திப்பு, பாடகி ஹரிணி தம்பதியினரின் மகன். தற்போது 'பென்ஸ், சூர்யா 45' ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.
லோகேஷ் கனகராஜ் கதையில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம்தான் 'பென்ஸ்'. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டது. படத்திலிருந்து அவர் விலகிவிட சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3ம் தேதியன்று அவரது மூன்று படங்களின் அப்டேட் வெளியானது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 49வது படத்திற்கும், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 51வது படத்திற்கும் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படங்களுக்காக அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாம். அதில் ஏதோ சிக்கல்கள் வர தற்போது சாய் அபயங்கரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். அடுத்தடுத்து சிம்புவின் இரண்டு படங்களுக்கு இவர் ஒப்பந்தமாகி இருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் 50வது படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்குப் பக்கமும் இசையமைக்க சாய் அபயங்கரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைக்கலாம் எனத் தகவல்.