தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து | கவர்ச்சிக்கு மாற நினைக்கும் கயாடு லோஹர் | டிசம்பர் 5ல் அகண்டா 2 ரிலீஸ் : தமிழில் பேசிய பாலகிருஷ்ணா | இன்னும் 2 மாதம் டல் சீசன் : பெரிய படங்கள் வராத நிலை | என் குழந்தைக்கு வயது 33 : ‛தேவர் மகன்' பற்றி கமல் பதிவு | ஐந்து மொழிகளில் வெளியான 'பாகுபலி தி எபிக் டிரைலர்' | 'டியூட்' படத்தை அடுத்து 'பைசன்' வெற்றி விழா | அஜித் மார்பில் அம்மன் டாட்டூ : பக்திப் பரவசத்தில் ரசிகர்கள் | பாலிவுட் என்று அழைக்காதீர்கள் : ஜெயா பச்சன் காட்டம் |

கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான படம் 'அமரன்'. சிறப்பான விமர்சனங்கள், ரசிகர்களின் வரவேற்பு என இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்களும் வந்தன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடிய இப்படத்திற்கான விழா இன்று(பிப்., 14) மாலை 4 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் 'அமரன்' படக்குழுவினர் சில சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
தனியார் டிவிக்கு இந்த நிகழ்வின் உரிமையை விற்றுவிட்டதால் பத்திரிகையாளர்களுக்கு எந்தவிதமான அழைப்பும் அனுப்பப்படவில்லை. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த பத்திரிகையாளர்களை 'அமரன்' குழு புறக்கணித்தது பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.




