தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
2025ம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி மாதத்தில் 26 படங்கள் வெளிவந்தன. இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதத்தில் கடந்த வாரம் 6ம் தேதி அஜித் நடித்த 'விடாமுயற்சி' படம் மட்டுமே வெளிவந்தது. அப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால், இந்த வாரம் 10 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டன.
ஒரே நாளில் இத்தனை படங்களா என கேள்விகள் எழுந்தாலும், அத்தனை படங்களின் வெளியீட்டைக் குறைக்க யாருமே முன்வரவில்லை. அவற்றில் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியீட்டிலிருந்து விலகியுள்ளது. விமல், சூரி நடித்த 'படவா' படம் மட்டும் இன்று(பிப்., 14) வெளியாகவில்லை.
மற்றபடி ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட “2 கே லவ் ஸ்டோரி, 9 எஎம் டூ 9 பிம் வேலன்டைன்ஸ் டே, அது வாங்கினால் இது இலவசம், பேபி அன்ட் பேபி, தினசரி, பயர், காதல் என்பது பொதுவுடமை, கண்நீரா, ஒத்த ஓட்டு முத்தையா” ஆகிய ஒன்பது படங்களும் இன்று வெளியாகின்றன.
இவற்றோடு ஹாலிவுட் படங்களான 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு', 'பிரிட்ஜட் ஜோன்ஸ் - மேட் அபவுட் த பாய்', ஹிந்திப் படமான 'சாவா', மலையாளப் படங்களான 'ப்ரோமான்ஸ், தாவீத், பைங்கிளி', தெலுங்குப் படங்களான 'பிரம்ம ஆனந்தம், லைலா' குறிப்பிடத்தக்க அளவிலான தியேட்டர்களில் இன்று வெளியாகின்றன.
அது மட்டுமல்லாது முந்தைய வாரங்களில் வெளியான தமிழ்ப் படங்களான 'விடாமுயற்சி, குடும்பஸ்தன்' ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் தியேட்டர்கள் போக மீதியுள்ள தியேட்டர்களில் மட்டுமே இன்று வெளியாகும் ஒன்பது படங்களும் குறைந்த அளவிலான தியேட்டர்களை பகிர்ந்து கொண்டுள்ளன.