தனுஷ் 55ல் இணைந்தார் ஸ்ரீலீலா | போட்டோகிராபர் செய்த செயல் : கசப்பான அனுபவம் பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் | அட்லி, அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் பிப்ரவரி முதல் இணையும் ஜான்வி கபூர் | ரஜினி 173வது படத்தின் கதை ஹாலிவுட் படத்தின் தழுவலா? | ஜூலையில் வெளியாகும் சூர்யா 46வது படம் | பெத்தி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக் : இரவு காட்சிகளை பகலில் படமாக்கிய முதல் படம் | 2027 ஏப்ரல் 7 : வாரணாசி வெளியீட்டு தேதி அறிவிப்பு | கேரளா ஸ்டோரி இரண்டாவது பாகமும் பரபரப்பு கிளப்புகிறது | வேள்பாரி கதையில் நடிக்கப்போவது யார்? : ரஜினிக்கு கவுரவ வேடமா? |

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்க இருந்த படம் 'கொரோனா குமார்'. இந்த நிறுவனம் தயாரித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்த சிம்பு இந்த படத்தில் நடிப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டு அவருக்கு 4 கோடியே 50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டது. பணத்தை பெற்றுக் கொண்ட சிம்பு நடிக்க வராமல் தாமதம் செய்தார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
இதை தொடர்ந்து சிம்புக்கு கொடுக்கப்பட்ட பணத்தை திருப்பித்தர கோரியும், வேறு படங்களில் அவர் நடிக்க தடைவிதிக்க கோரியும் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாத தொகை செலுத்த சிலம்பரசனுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து சிம்பு தரப்பில் ஒரு கோடி டெபாசிட் செய்யப்பட்டது. பின்னர், சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவன பிரச்னைக்கு தீர்வு காண ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணனை மத்தியஸ்தராக நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது, சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால், நடிகர் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட ஒரு கோடி ரூபாயை வட்டியுடன் சேர்த்து திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தது.