மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா | பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் |

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். தமிழில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி பதிப்பான 'சர்பிரா'வில் சூர்யா நடித்த கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படத்தை சுதா கொங்கராவே இயக்கி உள்ளார். சூர்யா தயாரித்துள்ளார். நேற்று இந்த படம் வெளியானது.
இந்த படத்தின் புரமோசன் பணிகளில் கடந்த சில வாரங்களாக அக்ஷய்குமார் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த அம்பானி இல்ல திருமண விழாவில் அவர் கலந்து கொள்ளவில்லை. அம்பானி குடும்பத்தினர் நேரில் அழைத்தும் அக்ஷய் குமார் வராதது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்தான் அக்ஷய்குமாருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அக்ஷய் குமார் தன்னோடு புரமோசன் பணிகளில் இணைந்து பணியாற்றியவர்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டும் அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.