பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

சுதா கொங்கரா இயக்கத்தில், அக்ஷய் குமார், ராதிகா மதன் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'சர்பிரா' ஹிந்திப் படம் நேற்று உலக அளவில் வெளியானது.
தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்தின் ரீமேக்தான் இந்த 'சர்பிரா'. இப்படத்தின் இணை தயாரிப்பாளர்களாக சூர்யா, ஜோதிகா உள்ளனர்.
தமிழில் ஓடிடியில் வெளியானாலும் வரவேற்பைப் பெற்ற ஒரு படம். ஹிந்தியிலும் சிறந்த வசூலைப் பெறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், நேற்றைய முதல் நாள் வசூலாக இந்தியாவில் வெறும் இரண்டரை கோடியை மட்டுமே வசூலித்துள்ளதாம்.
அக்ஷய் குமாரின் சமீபத்திய படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் இந்தப் படமாவது அவருக்குத் திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. படத்தைப் பார்த்தவர்கள் படம் நன்றாக இருப்பதாகவே சொல்லி வருகிறார்கள். அதனால், படம் நிச்சயம் வெற்றியை நோக்கிப் பயணிக்கும் என பாலிவுட்டில் நினைக்கிறார்கள். அவர்களது நினைப்பு நிறைவேறுமா, பொய்யாகுமா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.