பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' | பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை |
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன்பாபு மற்றும் பலர் நடிப்பில் 2020ம் ஆண்டு ஓடிடியில் வெளிவந்த படம் 'சூரரைப் போற்று'. இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்தை ஆரம்பித்த ஜிஆர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றுப் படம்தான் அது.
ஓடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் அந்தப் படம் வென்றது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒரிஜனல் திரைக்கதை ஆகிய தேசிய விருதுகளையும் வென்றது.
அப்படத்தை ஹிந்தியில் அக்ஷய்குமார், ராதிகா மதன் மற்றும் பலர் நடிக்க கடந்த இரண்டு வருடங்களாக படமாக்கி வந்தார்கள். 'சர்பிரா' எனப் பெயர் வைக்கப்பட்ட அப்படத்தின் டிரைலரை நேற்று யு டியூப் தளத்தில் வெளியிட்டார்கள். டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து சறுக்கலை சந்தித்து வந்த அக்ஷய்குமாருக்கு 'சர்பிரா' அவருடைய பழைய சாதனை வசூலை மீண்டும் பெற்றுத் தரும் என அவரது ரசிர்கள் நம்புகிறார்கள்.