ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தமிழில் ஓடிடியில் வெளிவந்த 'சூரரைப் போற்று' படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'சர்பிரா' படம் கடந்த வாரம் வெளியானது. சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்திருந்தார். தொடர்ந்து தோல்விப் படங்களாகக் கொடுத்து வந்த அக்ஷய் குமாருக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்த்தார்கள்.
படத்திற்கும் அவ்வளவு மோசமான விமர்சனங்கள் வரவில்லை. பரவாயில்லை என்றுதான் பலரும் விமர்சித்திருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்த அளவு படத்திற்கு ஓபனிங் கிடைக்கவில்லை. முதல் நாள் வசூலாக வெறும் இரண்டரை கோடி மட்டுமே வசூலித்தது. சமீப காலங்களில் அக்ஷயின் முதல் நாள் வசூலில் இது மோசம் என்கிறார்கள். அடுத்தடுத்த நாட்களிலாவது படம் பிக்கப் ஆகிவிடும் என்று எதிர்பார்த்தார்கள். அதுவும் நடக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் 20 கோடி மட்டுமே வசூலகியுள்ளதாம்.
ஆனால், ஏழை மக்களும் பயணிப்பதற்காக குறைந்தகட்டண விமான நிறுவனத்தை ஆரம்பித்தவரின் பயோபிக் படம் இது. படம் வெளியாகி ஒரு வாரமாகியும் 'டேக் ஆப்' ஆகாமல் தவிக்கிறது. பாலிவுட் ரசிகர்களை 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப், கல்கி 2898 ஏடி' போன்ற படங்கள் மாற்றிவிட்டது என்று ஹிந்தித் திரையுலகினர் நினைக்கிறார்கள். அதனால்தான் மசாலாத்தனமாக வெளிவந்த 'ஜவான், அனிமல்' ஆகிய ஹிந்திப் படங்கள் மட்டுமே பெரும் வெற்றியைப் பெற்றது.
நல்ல கதையம்சம் உள்ள படங்களை ரசிப்பதை ஹிந்தி ரசிகர்கள் குறைத்துக் கொண்டார்களோ என்று பாலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.




