ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
பாலிவுட் முன்னணி நடிகரான அக்ஷய்குமார் விளம்பரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடித்த பான் மசாலா விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதும். இனி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்தார். நடித்ததற்காக மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில் அக்ஷய்குமார் நடித்துள்ள பான் மசாலா விளம்பரம் ஒன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், அக்ஷய்குமார் அது பழைய விளம்பரம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது: தற்போது வைரல் ஆகி வரும் பான் மசாலா விளம்பரம் 2021 அக்டோபர் மாதத்தில் படமாக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி இந்த விளம்பரத்தை 2023 நவம்பர் மாதம் வரை ஒளிபரப்பலாம். இதுதவிர நான் புதிதாக இது போன்ற எந்த விளம்பரத்திலும் நடிக்கவில்லை. ஏற்கனவே பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்து இருக்கிறேன். அதன் பிறகு இதுவரை அத்தகைய விளம்பரங்களில் நடிக்கவே இல்லை.
தயவு செய்து இது போன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதற்காக வாங்கிய பணத்தை நல்ல காரியத்துக்கு கொடுத்து விட்டேன் என்றும், இனிமேல் இத்தகைய விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.