எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்கிற கோஷம் பல ஆண்டுகளாகவே தெற்கில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ந்த மாநிலங்களாக தென்னிந்திய மாநிலங்களை முதலிடத்தில் இருக்கிறது. அரசியலை போலவே சமீபகாலமாக திரைப்படங்களிலும் வடக்கு, தெற்கு பிரித்து பார்க்கப்படுகிறது. இதனை அக்ஷய்குமார் கடுமையாக எதிர்த்துள்ளார்.
அவர் நடித்துள்ள பிருத்விராஜ் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் இதுகுறித்து பேசியிருப்பதாவது: ஒவ்வொரு படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலேயே உருவாகிறது. அனைத்து படங்களும் வெற்றிபெற வேண்டும். தென்னிந்திய சினிமா, வட இந்திய சினிமா என்று யாராவது பிரித்து சொன்னால், அதை வெறுக்கிறேன். அதோடு பான் இந்தியா படங்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. நாம் அனைவரும் ஒரே துறையில் தான் பணியாற்றுகிறோம் என்றே நம்புகிறேன். தெற்கு, வடக்கு என்கிற விவாதம் பெரிதாக மாறிவிட்டது. அது நிறுத்தப்பட வேண்டும். மொழியை பொறுத்தவரை அவரவர் தாய்மொழியில் தான் பேசி வருகிறோம். அது அழகாக இருக்கிறது. இதில் பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பிரித்துப் பார்ப்பது துரதிர்ஷ்டமானது. என்றார்.
இதே கருத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் கமல்ஹாசன் அங்குள்ள மீடியாக்களிடம் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நான் எப்போதும் என்னை இந்தியனாகவே பார்க்கிறேன். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நான் வசதியாக இருக்க முடியும். அதுதான் இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் அழகு. வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் அபாரத் திறமைகளை அறிவேன். அதனால் அதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. என்று கூறியுள்ளார்.