பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி திருமணம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. இருவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண வரவேற்பில் அவர்களது நெருங்கிய திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
இருவரது திருமணப் புகைப்படங்களும் குறைந்த அளவில்தான் மீடியாக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிக்கி அவரது சமூக வலைத்தளத்தில் அடுத்தடுத்து தங்களது திருமணப் புகைப்படங்களைப் பதிவிட்டு மகிழ்ந்து வருகிறார். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ஒரு கேப்ஷனையும் பதிவிடுகிறார்.
திருமணத்திற்குப் பிறகும் நிக்கி கல்ராணி சினிமாவில் நடிப்பார் என்றே தெரிகிறது. அவரது கைவசம் எந்த ஒரு தமிழ்ப் படமும் இல்லை. திருமணத்திற்குப் பிறகு அவரைத் தேடி வாய்ப்புகள் போகுமா என்பது இனிமேல்தான் தெரியும்.