ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
ஹிந்தி தேசிய மொழியா, இல்லையா என்பது குறித்து கன்னட நடிகர் சுதீப்பும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானும் மோதிக் கொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பா.ஜ.க மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம் தான். கடந்த சில நாட்களாக மொழி அடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்ப சில முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை எங்கள் கட்சி பார்க்கிறது. மாநில மொழிகளை மதிக்கிறோம், வணங்குகிறோம் என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து கிச்சா சுதீப் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ஹிந்தி இனி நமது தேசிய மொழி அல்ல என கூறி நான் கலகத்தையோ, விவாதத்தையோ ஏற்படுத்தவில்லை. எந்தவித நோக்கமுமின்றி தன்னிச்சையாக நிகழ்ந்தது அது. எனது கருத்தை நான் முன் வைத்தேன் அவ்வளவுதான். பிரதமரின் வார்த்தைகளில் இது வெளிப்பட்டது ஒருவித பெருமையாகவும் பாக்கியம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நான் கன்னட மொழிக்காக மட்டும் பேசவில்லை. எல்லா மொழிகளும் மதிக்கப்பட வேண்டும் என பிரதமர் பேசிய கருத்தைத் தான் நானும் அன்றைக்கு முன் வைத்தேன். மோடியை அரசியல்வாதியாக மட்டும் பார்க்காமல் ஒரு தலைவராகவும் பார்க்கிறோம் என சுதீப் தெரிவித்துள்ளார்.