திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து | 'ஜனநாயகன்' ரிலீஸ் தாமதம் : விஜய் கருத்து? | தி ராஜா சாப் : பிப்ரவரி 6ல் ஓடிடி ரிலீஸ் | ஆறு வருடங்களாக நடக்கவே முடியாத நான் மூன்றே நாட்களில் நடந்தேன் : அரவிந்த்சாமி | தொடரும் பட இயக்குனரின் புதிய படத்தில் வித்தியாசமான பெயரில் நடிக்கும் மோகன்லால் | ஜனநாயகன் சென்சார் பிரச்சனை : பாலிவுட் எம்பி நடிகர் ஆதரவு | தமிழக அரசின் விருதுகள் : தனுஷ், ஏஆர் ரஹ்மான் நன்றி |

கடந்த 2023ம் ஆண்டில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கினார் அட்லி. இந்த படம் 1100 கோடி வசூலித்தது. ஆக்ஷன் கதையில் உருவான இந்த படம் ஷாருக்கானுக்கு முதல் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் அடுத்தபடியாக ஜவான் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷாருக்கானை வைத்து மீண்டும் அட்லி இயக்கப்போவதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகி வந்தன.
இது குறித்து அட்லியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷாருக்கான் நடிப்பில் ஒரு படம் இயக்கப் போகிறேன். ஆனால் அது ஜவான் 2 அல்ல, வேறு படம். அதோடு ஷாருக்கான் நடிப்பில் டான் படத்தின் மூன்றாம் பாகத்தை நான் இயக்குவதாக ஊடகங்களில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. அது உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அட்லி.
தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் 22வது படத்தை இயக்கி வருகிறார் அட்லி. இந்த படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கிறார்.