கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத, எவர் கிரீன் படங்களைக் கொடுத்த இயக்குனர்கள் பெற்ற சம்பளத்தை விடவும், மாஸ் ஹீரோக்களை வைத்து கமர்ஷியல் படங்களைக் கொடுக்கும் இயக்குனர்கள்தான் அதிக சம்பளம் பெறுவார்கள். அது இந்தக் காலத்திலும் தொடர்ந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் முதல் முறையாக 100 கோடி சம்பளத்தைப் பெற்றுள்ள இயக்குனர் அட்லி என்கிறார்கள். அவர் தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்திற்கு அவருக்கு அவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளதாக கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
அவருக்கு அடுத்து அதே அல்லு அர்ஜுனை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ் அதிக சம்பளம் பெறப் போவதாகத் தகவல். அல்லு அர்ஜுனின் 23வது படமாக உருவாக உள்ள அந்தப் படத்திற்காக லோகேஷ் 75 கோடி சம்பளம் கேட்டாராம். அதற்கு தயாரிப்பு நிறுவனம் சரி என்று சொல்லிவிட்டதாக டோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இந்திய அளவில் தற்போது எஸ்எஸ் ராஜமவுலிதான் அதிகம் சம்பளம் பெறும் இயக்குனராம். அவருடைய சம்பளம் 200 கோடி எனத் தகவல். அடுத்து 'அனிமல்' படத்தை இயக்கி தற்போது பிரபாஸ் நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தை இயக்கும் சந்தீப் ரெட்டி வங்கா. அவருடைய சம்பளம் 100 கோடிக்கு மேல் என்கிறார்கள்.
'புஷ்பா' படத்தை இயக்கிய சுகுமார், மற்றும் ஹிந்தி இயக்குனர்கள் ராஜ்குமார் ஹிரானி, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் சுமார் 75 கோடி சம்பளம் பெறுகிறார்களாம்.
இவையனைத்தும் சினிமா வட்டாரங்களில் உலா வரும் அதிகாரப்பூர்வமற்ற சம்பளத் தகவல்கள். உண்மை சம்பளம் எவ்வளவு என்பது, அவர்களது ஆடிட்டர்களுக்கும், வருமான வரித் துறைக்கும் தான் தெரியும்.




