கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? |

கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் தொடரும் திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற இந்த படம் கிட்டத்தட்ட 230 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தை இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் தருண் மூர்த்தி டைரக்ஷனிலேயே இந்த வருடமும் ஒரு புதிய படத்தில் மோகன்லால் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் மோகன்லால் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவரது கதாபாத்திர போஸ்டரும் வெளியாகி உள்ளது. இதில் வழக்கத்திற்கு மாறாக சற்று தடித்த மீசையுடன் மோகன்லால் காணப்படுகிறார். அது மட்டுமல்ல இந்த படத்தில் டி.எஸ் லவ்லாஜன் என்பதுதான் அவரது கதாபாத்திர பெயர். மலையாள சினிமாவில் இதுவரை வைக்கப்பட்டிராத, அவ்வளவு ஏன் மலையாள ரசிகர்களே கூட கேள்விப்பட்டிராத ஒரு பெயராகத்தான் இது இருக்கிறது.