ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

விஜய் நடிப்பில் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டு உருவாகி உள்ள படம் ஜனநாயகன். பொங்கல் வெளியீடாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர் மாதத்திலிருந்து தொடர்ந்து சென்சார் பிரச்னைகளில் சிக்கி தவித்து வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம், அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரை இந்த பிரச்னை சென்றும் தற்போது வரை இதற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று தெரியாத நிலைதான் தற்போதும் இருக்கிறது.
இந்த நிலையில் ஹிந்தி மற்றும் போஜ்புரி நடிகரும் ஆளுங்கட்சியான பாஜகவை சேர்ந்த எம்பியுமான நடிகர் ரவி கிஷன் ஜனநாயகன் சென்சார் பிரச்னையில் தேவைப்பட்டால் தான் பார்லிமெண்டில் குரல் கொடுக்க கூட தயார் என்று கூறியுள்ளார். ஹிந்தி மற்றும் போஜ்புரி மொழியில் பிஸியாக நடித்து வரும் நடிகர் ரவி கிஷன் தமிழில் டி ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனலிசா மற்றும் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் உத்ரபிரதேசத்தில் உள்ள கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இவரிடம் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்ட விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது அதற்கு பதில் அளித்த ரவி கிஷன், “இந்த பிரச்சனை குறித்து ஜனநாயகன் படக்குழுவினர் என்னை எந்த நேரமும் அணுகலாம். அப்படி அவர்கள் அணுகினால் சென்சார் போர்டிடமே ஏன் இந்த படத்திற்கு சான்றிதழ் கொடுக்காமல் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புவேன். அதுமட்டுமல்ல தேவைப்பட்டால் பார்லிமென்ட்டில் சென்சார் போர்டு இன்னும் பெரிதாக, சிறப்பாக, விரைவாக இந்த சென்சார் சான்றிதழ் நடவடிக்கைகளை முடித்து தர வேண்டும் என்கிற விவாதத்தையும் எழுப்புவேன். என்னால் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரிடம் பெர்சனல் ஆகவே பேச முடியும்” என்று கூறியுள்ளார்.
ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவர் இப்படி சென்சார் போர்டு குறித்து கூறி இருப்பதை சிலர் வரவேற்றாலும், ஜனநாயகன் தரப்பினர் இவரிடம் உதவி கேட்டு தான் இவர் அதை செய்ய வேண்டுமா, தன்னிச்சையாகவே இந்த கேள்வியை அவர் சென்சார் போர்டு நோக்கி திருப்பலாமே என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.