புஷ்பா 2 டப்பிங் ஜரூர் : ஆனால் ராஷ்மிகா முகத்தில் சோகம் | குபேரா படத்தின் முன்னோட்ட வீடியோவை வெளியிடும் மகேஷ் பாபு | யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படக்குழு மீது வழக்குப்பதிவு | ‛அமரன்' ஓடிடி வெளியீட்டை தள்ளி வைக்க திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை | கங்குவா டிரைலர் - அஜித் கொடுத்த ரியாக்ஷன் | 'கங்குவா' வெளியீடு - வழக்கு சிக்கல்களுக்குத் தீர்வு | 'பிளடி பெக்கர்' நஷ்டத்தைத் திருப்பித் தரும் தயாரிப்பாளர் நெல்சன்? | மே 1 - தொழிலாளர் தினத்தில் ரஜினிகாந்தின் 'கூலி' ரிலீஸ்? | தள்ளிப்போகும் ‛வீர தீர சூரன்' பட ரிலீஸ் | பொங்கல் ரேசில் இணையும் பாலாவின் வணங்கான் |
இந்தியாவின் டாப் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வுகள் கடந்த சில நாட்களாக மும்பையில் நடைபெற்றது.
இந்திய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், உலகப் பிரபலங்கள் பலரும் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். பாலிவுட்டின் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விதவிதமான ஆடைகளில் அவர்களது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன. சினிமா ரசிகர்களுக்கு கடந்த சில நாட்களாக இவைதான் விவாதப் பொருளாகவும் ஆகியுள்ளது.
திருமண வரவேற்பில் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் கட்டி வந்த வாட்ச்சின் விலை 2 கோடி என்பதுதான் அதில் ஹாட் டாபிக் ஆனது. “அடமர்ஸ் பிகட்' என்ற ஸ்விட்சர்லாந்து பிராண்ட் வாட்ச் அது. சில பல கோடி மதிப்புள்ள வாட்ச்களைக் கட்டுவது ஆண் பிரபலங்களுக்கும், சில லட்சங்கள் மதிப்பு கொண்ட ஹேண்ட் பேக்குகள் எடுத்துச் செல்வது பெண் பிரபலங்களுக்கும் பேஷன் ஆக உள்ளது.