2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் கருத்துகளை ஆதரித்தும், எதிர்கட்சி கருத்துகளை விமர்சித்தும் வந்த கங்கனா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தான் பிறந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தல் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது எம்.பி ஆகியுள்ள அவர் விரைவில் அமைச்சராகும் சாத்தியகூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எம்.பி., என்கிற வகையில் தன்னை சந்திக்க வருகிறவர்களுக்கு புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: இமாச்சல பிரதேசத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். எனவே என்னை சந்திக்க வரும் தொகுதி மக்கள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். தொகுதி மக்கள் என்னை மண்டியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். மாநில மக்கள் மணாலியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். வருகையின் நோக்கம் மற்றும் விஷயமும் முன்னரே எழுதி அனுப்ப வேண்டும். கூட்டத்தையும், நேரம் வீணாவதை தடுக்கவுமே இந்த ஏற்பாடு என்று கூறியுள்ளார்.
அடையாள அட்டை இல்லாத அனைத்து தரப்பு மக்களையும் மக்கள் பிரதிநிதிகள் சந்திக்க வேண்டும். அது அவர்களது பொறுப்பு. அதைவிடுத்து அடையாள அட்டையுடன் வர வேண்டும் என்று கூறுவது சரியல்ல என்று எதிர்கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள்.