நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாலிவுட்டின் பிரபல நடிகர் விக்கி கவுசல். தற்போது இவர் நடித்துள்ள படம் ‛பேட் நியூஸ்'. ஆனந்த் திவாரி இயக்கி உள்ளார். ரொமானட்டிக் காமெடி படமாக உருவாகி உள்ளது. அடுத்தவாரம் ஜூலை 19ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் விக்கி கவுசல் அளித்த பேட்டி :
படத்தின் டிரைலருக்கு கிடைத்துள்ள வரவேற்பு பற்றி
படத்தின் டிரைலரை மக்கள் ரசித்ததில் மகிழ்ச்சி. அதேசமயம் மக்கள் படத்தை எப்படி விரும்புவார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆவலாக உள்ளேன். ஏனென்றால் முதல் முறையாக நகைச்சுவை கலந்த பொழுபோக்கு படத்தில் நடித்துள்ளேன். இதற்கு முன்பும் நான் சில காமெடி படங்களில் நடித்தாலும் இந்த படத்தின் காமெடி வேற லெவலில் இருக்கும்.
படத்தின் கதையை கேட்ட பின் எப்படி உணர்ந்தீர்கள்?
என்னிடம் கதையை இயக்குனர் ஆனந்த் திவாரி சொல்லும் போது அந்த நேரத்தில் மிகவும் ரசித்தேன். இது உண்மையில் நடக்குமா என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அப்போது அவர் என்னிடம் சில கட்டுரைகளைக் காட்டி இதுவரை உலகம் முழுவதும் சுமார் 15 முதல் 17 பேருக்கு இந்த மாதிரி சம்பவம் நடந்துள்ளது என்றார்.
உங்களை பன்முக நடிகராக ரசிர்கள் பார்க்கிறார்கள் அதுபற்றி
நல்ல விஷயம் தான். ஏனென்றால் இன்று ஒவ்வொரு நடிகரும் தன்னை ஒரு பன்முக நடிகராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்கள் உங்களை அப்படி பார்ப்பது ஒரு கவுரவம். பன்முக நடிகர் என்று அழைப்பதே பெருமை. நான் இன்னும் புதியவன் தான். எனக்கான பயண தூரம் இன்னும் அதிகமாக உள்ளது. மக்கள் என்னை தொடர்ந்து ரசிக்க, அவர்களின் அன்பை பெற முயற்சித்துக் கொண்டே இருப்பேன்.
இவ்வாறு தெரிவித்தார்.