தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' | பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ் | முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் தயாராகும் 'மரகத நாணயம் 2' | 'ஜனநாயகன்' வழக்கு நாளை, ஜனவரி 20ல் மீண்டும் விசாரணை | யஷ், பிரபாஸ் பாணியில் விஜய் சேதுபதி | 2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? |

'பேச்சுலர்' படத்தின் மூலம் அறிமுகமானவர் திவ்யபாரதி. அதன்பிறகு 'மகாராஜா, கிங்ஸ்டன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 'கோட்' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த படத்தை நரேஷ் குப்பிலி இயக்குகிறார், சுதீர் நாயகனாக நடிக்கிறார்.
இந்த நிலையில் இயக்குனர் நரேஷ் குப்பிலி தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாக திவ்யபாரதி புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இயக்குனர் நரேஷ் என்னை 'சிலகா' என்று அழைக்கிறார். சிலகா என்றால் பறவை என்று பொருள் இருந்தாலும், தெலுங்கில் பெண்களை மரியாதைக்குறைவாக அழைக்க பயன்படுத்தப்படும் வார்த்தை. இது எனக்கு நகைச்சுவையாக தெரியவில்லை. பெண்களை 'சிலகா' அல்லது வேறெந்த இழிவான வார்த்தைகளாலும் அழைப்பதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள முடியாது. அது பெண் வெறுப்பு சிந்தனையின் பிரதிபலிப்பு. இது ஒருமுறை மட்டுமே நடந்த சம்பவம் அல்ல.
அந்த இயக்குனர் படப்பிடிப்பு தளத்திலும் இதேபோன்று பெண்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார். இயக்குனரின் இச்செயலுக்கு இப்படத்தின் ஹீரோவும் அமைதியாக இருப்பதை பார்த்து, இதுபோன்ற கலாசாரம் நிலைத்திருக்க உதவுகிறது என்பது ஏமாற்றமாக இருக்கிறது.
பெண்கள் கேலிக்கு ஆளாகாத சூழல் கொண்ட இடங்களில் பணிபுரிய, அந்த இடங்களை நான் தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு குரலும் முக்கியம். மரியாதையை பேரம் பேச முடியாத இடங்களை நான் தேர்வு செய்கிறேன். இது வெறும் தேர்வு மட்டுமல்ல. ஒரு கலைஞராகவும், ஒரு பெண்ணாகவும் இதுதான் எனது உறுதியான நிலை" என்று தெரிவித்துள்ளார்.




