படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
ஜி.வி.பிரகாஷ் நடித்த ‛பேச்சுலர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. அந்த படத்தில் இருவரின் காதல் காட்சிகள் இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இருவரும் காதலிப்பதாக செய்திகள் பரவியது. ஜி.வி. பிரகாஷ் விவாகரத்தை அறிவித்தவுடன் மேலும் அதிகமாக இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ‛கிங்ஸ்டன்' படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தை கமல் பிரகாஷ் இயக்கி உள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற ஜி.வி. பிரகாஷும், திவ்யபாரதியும் இது குறித்து முதல்முறையாக பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்துப் பேசிய ஜி.வி.பிரகாஷ், ‛‛பேச்சுலர் படத்திற்குப் பிறகு நாங்கள் இருவரும் டேட் செய்வதாக பேசப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் இருவருமே படப்பிடிப்பு தளத்தில் மட்டுமே சந்தித்துக் கொள்வோம். நாங்கள் சாதாரண நண்பர்கள் மட்டுமே. இருவரும் வெளியில் எங்கும் சந்தித்துக் கொண்டதில்லை'' என்றார்.
அதேபோல் நடிகை திவ்யபாரதி, ‛‛ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்திற்கு பின் என்னை பலர் டார்கெட் செய்து திட்ட தொடங்கிவிட்டனர். பெண்களே அதிகம் திட்டி வருகின்றனர். அதையெல்லாம் கேட்கும் போது கடினமாக உள்ளது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அதை தவிர்த்து வேறு ஒன்றும் இல்லை'' என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த பிரச்னைக்கு இவர்கள் இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.