எஸ்பிபி போல் மூச்சுவிடாமல் பாடி அசத்திய மஹதி! | தொடர்ந்து நாயகிகளுக்கு ‛ரம்யா' பெயர்: ஆதிக் ரவிச்சந்திரனின் ‛சென்டிமென்ட்' | “தம்பி கலக்கிட்டான்” - ‛மிஸ்டர் எக்ஸ்' கவுதம் கார்த்திக்கு ஆர்யா பாராட்டு | மெகா பட்ஜெட்டால் கிடப்பில் போடப்பட்ட பயோபிக் படம் | டோலிவுட் நடிகர்களிடம் சரண்டர் ஆன நடிகை | சினிமாவிலும் சிறகடிக்க ஆசை: மனம் திறக்கும் கோமதி பிரியா | ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆசைப்படும் ராஷி கண்ணா | 9 வயதிலேயே பேட் டச்! நேஹா கவுடா சந்தித்த கொடூரம் | ஜி.வி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்துக்கு நான் காரணமா? மனம் திறந்த திவ்யபாரதி | அடுத்தடுத்து இரண்டு சீரியல்களில் கமிட்டான ஷோபனா |
பா.விஜய் இயக்கியுள்ள ‛அகத்தியா' படத்தில் ஜீவா, ராஷி கண்ணா, யோகி பாபு, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் மற்றும் டபிள்யு ஏ எம் நிறுவனத்தின் சார்பில் அனீஸ் அர்ஜுன் தேவ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்துக்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகும் இப்படம், பேன்டஸி-ஹாரர் ஜானரில் தயாராகி உள்ளது. வரும் 28ம் தேதி பான் இந்திய அளவில் இப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் பா விஜய், நடிகர் ஜீவா, நடிகை ராஷி கண்ணா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் தீபக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ராஷி கண்ணா, ‛‛நான் ஏற்கனவே தமிழில் அரண்மனை 3 மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்துள்ளேன். ஹாரர் படங்களில் நடிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் இந்த படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம். என் உடன் நடித்த ஜீவா திறமையான நடிகர். அதேபோல் இயக்குனர் பா விஜய் மிகவும் பிரம்மாண்டமாகவும், அதே நேரம் சோசியல் மெசேஜ் ஒன்றையும் படத்தில் சொல்லி உள்ளார். இந்த படத்துக்கு பிறகு அவர் மிகப்பெரிய இயக்குனராக தமிழ் சினிமாவில் அறியப்படுவார். அதேபோல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அதிகப்பொருட்செலவில் பிரமாண்டமாக அகத்தியா படத்தை தயாரித்துள்ளார். தீபக் குமாரின் ஒளிப்பதிவு இங்கு திரையில் பார்க்கும்போது பிரம்மாண்டமாக தெரிகிறது. அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும்'' என்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், நீங்கள் பாலிவுட்டிலும் நடிக்கிறீர்கள், கோலிவுட்டிலும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள், எப்போது ஹாலிவுட் படத்தில் நடிப்பீர்கள் என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராஷி கண்ணா, ‛‛ஓ நன்றி, அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கும் ஹாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது'' என்றார்.