பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் | 'ப்ரோ கோடு' தலைப்பிற்கு சிக்கல்: டில்லி உயர்நீதிமன்ற தடையால் தலைவலி |

தொகுப்பாளரான சித்து, தனியாக யுடியூப் தளத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவரது தளத்தில் சினிமா பிரபலங்களே பங்கேற்று படத்தை புரொமோஷன் செய்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இவர் சினிமாவில் இயக்கி, நடிக்கும் 'டயங்கரம்' படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதன்பின் அந்த படம் பற்றிய எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் இன்று 'டயங்கரம்' படத்தின் படப்பிடிப்பை பூஜை நிகழ்வுடன் தொடங்கியுள்ளனர். இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், நடிகர்கள் நட்டி நட்ராஜ், இளவரசு, இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மற்றும் வி.ஜே.சித்து குழுவினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.